உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்றபெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்ததுபத்தாவது
பத்தராய்ப்பணிவார் சருக்கம்
அப்பாலு மடிச்சார்ந்தார் புராணம்
தாராரு மூவேந்தர் பயிலுந் தொல்லைத்
தமிழ்நாட்டப் புறத்திறைவன் சரணஞ் சார்ந்த
சீராருந் தொண்டர்களு மண்ட ரேத்துந்
திருத்தொண்டத் தொகையருளாற் செப்புங் காலத்
தேராருந் தொடையிலுறா திப்பா லப்பா
லெந்தைபிரா னடியடைந்த வியல்பி னோரு
மாராத காதலுடை யவர்க ளன்றோ
வப்பாலு மடிச்சார்ந்த வடியார் தாமே.சேரசோழபாண்டியர் என்னும்மூவேந்தருக்கும் உரிய தமிழ்நாட்டுக்கு அப்புறத்திலே சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்திநாயனாருடைய திருத்தொண்டர்த் தொகையிலே சொல்லப்பட்ட திருத்தொண்டர்களுடைய காலத்துக்கு முன்னும் பின்னும் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும், அப்பாலுமடிச்சார்ந்தாரென்று சொல்லப்படுவார்கள்.
¾¢ÕüÈõÀÄõ
பத்தராய்ப்பணிவார் சருக்கம் முற்றுப்பெற்றது.