உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்றபெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்ததுபதினொராவது
மன்னியசீர்ச் சருக்கம்
இசைஞானியார் புராணம்
நாவற் றிருப்பதிக்கோர் செல்வச் சைவ
நாயகமாஞ் சடையனார் நயந்த வின்பப்
பூவைக் குலமடந்தை பொற்பார் கொம்பு
புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே
யாவிற் றிகழ்தலைவன் வலிய வாண்ட
வாரூர ரவதரிக்க வருந்தவங்கள் புரிந்தார்
யவர்க்கு மெட்டாத விசைந்த வின்ப
விசைஞானி யெனஞான மெளிதா மன்றே.சடையநாயனாருடைய மனைவியார் இசைஞானியாரென்பவர் எம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்திநாயனாரைப் பெற்றருளிய அவருடைய பெரும்புகழைச் சிறியேனுடைய புன்மொழியினாலே புகலமுடியுமோ? முடியாது.
¾¢ÕüÈõÀÄõ