சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

பதினொராவது
மன்னியசீர்ச் சருக்கம்

மங்கையர்க்கரசியார் புராணம்

மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து
    மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண்
சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல
    சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த
பொங்குதிரு வருளுடைய போத வல்லி
    பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட னருளா லின்பஞ்
    சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.

    துரையில் இருந்த நெடுமாறநாயனாருக்கு மனைவியார் சோழராஜாவுடைய புத்திரியாராகிய மங்கையர்க்கரசியார்.  அவர் சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டவர்.  அந்தப் பரமாசாரியருடைய திருவருளினாலே நெடுங்காலம் தம்முடைய நாயகருக்குச் சைவவழித் துணையாகி, பாண்டி நாடெங்கும் சைவத்திருநெறியைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருந்து, அந்நாயகரோடு  சிவபதத்தை அடைந்தார்.

    ¾¢ÕüÈõÀÄõ