சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

பத்தாவது
பத்தராய்ப்பணிவார் சருக்கம்

திருவாரூர்ப்பிறந்தார் புராணம்

பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற்
    பொருந்தினர்க ளல்லாத புகழி னுள்ளார்
சங்கையிலா வருந்தவமுன் புரிந்தா ரிங்குச்
    சார்விலா ரிறைவனருள் சார்த லாலே
கங்கைவாழ் சடைமுடியா னருளை நீங்காக்
    கணநாத ரெனவாழுங் கருத்தார் கன்னிச்
செங்கண்வரால் வளர்வாவி திகழு மாரூர்ச்
    சிறந்துளா ரெமையாளப் பிறந்து ளாரே.

    பூர்வஜன்மத்திலே செய்த புண்ணியத்தினாலே திருவாரூரென்னுஞ் சிவஸ்தலத்திலே சைவமரபினராய்ப் பிறந்தவர்கள் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்குவருணத்தாராயினும் சங்கரசாதியாராயினும், பரமசிவனுடைய திருவருளை அடைதலால், சிவகணநாதர்களாய் இருப்பார்கள்.  திருவாரூர்ப் பிறந்தாரெல்லாருஞ் சிவகணநாதர்கள் என்று சிவபெருமானே நமிநந்தியடிகணாயனாருக்கு அருளிச்செய்தனர்.  அந்நாயனாரும் அவர்களெல்லாருஞ் சிவகணநாத வடிவினராய்த் தோன்றக் கண்டனர்.

 ¾¢ÕüÈõÀÄõ